வடகிழக்கு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த வன்முறையில் 47 பேர் உயிரிழந்தனர்.
இதில், மத்திய உளவுப் பிரிவு அலுவலர் அங்கித் சர்மாவும் (26) ஒருவர். இவர் கற்களால் தாக்கப்பட்டு கடும் சித்ரவதைக்கு மத்தியில் உயிரிழந்துள்ளார். இவரின் உடல் சாக்கடையில் வீசப்பட்டிருந்தது.
இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். அப்போது இந்த கொலை சம்பவத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு தொடர்பிருப்பதாக அங்கித் சர்மாவின் தந்தை புகார் அளித்தார்.
இதையடுத்து அவரை ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் தலைமறைவான தாஹிர் உசேன், மார்ச் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இதையும் படிங்க: ஐஎம்ஏ ஊழல் வழக்கில் கைதான ஐஏஎஸ் அலுவலர் தூக்கிட்டு தற்கொலை!