பெங்களூர்: சட்டவிரோத பண பரிவர்த்தனை, போதைப் பொருள் வழக்கில், தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், நான்காவது குற்றவாளியாக பினிஷ் கோடியேரி பதிவு செய்யப்பட்டுள்ளார்.
பினிஷ் கோடியேரி மற்றொரு குற்றவாளியான அனுப்புடன் சட்டவிரோத பண பரிவர்த்தனையில், ஈடுபட்டுள்ளார். அனுப்பின் போதைப் பொருள் வணிகத்துக்கு கருப்புப் பணத்தை கோடியேரி பயன்படுத்தியுள்ளார். மேலும், அனுப் பெயரை சட்டவிரோதமாக பயன்படுத்தி பெங்களூரு, கேரளாவில் விடுதிகளை திறந்துள்ளார் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும் அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது. அதன்படி, அனிகா, ரிஜேஷ் ரவிச்சந்திரன், முகமது, அனுப், பினிஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பின்பு சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் சிக்கியதும், அதனடிப்படையில் இவ்வழக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கு: அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான பினிஷ் கோடியேரி!