கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் மத்திய அரசை குற்றம்சாட்டிவரும் நிலையில், பொருளாதாரத்தை தவறாக கையாண்டதன் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன, இதனை இனியும் அமைதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் செய்திகளில் வெளியான மக்களின் வருமானம் குறித்த விவரங்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 10 இல் எட்டு குடும்பங்கள் வருமானத்தை இழந்துள்ளன, நகர்புறத்தைக் காட்டிலும் கிராமப்புறத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது, பத்தாண்டுகளில் முதல் முறையாக கடும் வறுமை ஏற்படவுள்ளது என மூன்று முக்கிய தரவுகளை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE), சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் ஒன்றிணைந்து ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளனர். அதன் தரவுகளைதான் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
ஊரடங்கு காரணமாக கீழ், நடுத்தர வரக்கத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதில் 84 விழுக்காட்டினர் தங்களின் வருமானத்தை இழந்துள்ளனர் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
India’s economic mismanagement is a tragedy that is going to destroy millions of families.
— Rahul Gandhi (@RahulGandhi) July 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
It will no longer be accepted silently.#BJPsDistractAndRule pic.twitter.com/6idGN1A7xS
">India’s economic mismanagement is a tragedy that is going to destroy millions of families.
— Rahul Gandhi (@RahulGandhi) July 7, 2020
It will no longer be accepted silently.#BJPsDistractAndRule pic.twitter.com/6idGN1A7xSIndia’s economic mismanagement is a tragedy that is going to destroy millions of families.
— Rahul Gandhi (@RahulGandhi) July 7, 2020
It will no longer be accepted silently.#BJPsDistractAndRule pic.twitter.com/6idGN1A7xS
உலகளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காடு குறைந்தால் 17 கோடி மக்கள் கடும் ஏழ்மையில் சிக்கி தவிப்பர், அதில் 50 விழுக்காட்டினர் இந்தியராக இருப்பர் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் மனித சோதனைக்கு தயாராக இருக்கும் கோவிட்-19 தடுப்பூசி !