ETV Bharat / bharat

விவிபேட் விவகாரம்: நாளை ஆலோசிக்கிறது தேர்தல் ஆணையம்!

டெல்லி: பிரச்னை ஏற்பட்டால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான அனைத்து வாக்குகளையும் ஒப்புகைச் சீட்டு கருவிகளுடன் சரிபார்த்து தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கோரி எதிர்கட்சிகள் அளித்த மனு பற்றி தேர்தல் ஆணையம் நாளை ஆலோசிக்க உள்ளது.

விவிபேட் விவகாரம்
author img

By

Published : May 21, 2019, 6:15 PM IST

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை மறுநாள் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட 22 எதிர்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

மேலும், ஒப்புகைச் சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும் எனவும், ஒரு வாக்குச்சாவடியை சேர்ந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், ஒப்புகைச் சீட்டுகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் மாறுபட்டால், அந்த சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளையும் சரிபார்த்த பின்தான் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரம் பற்றி நாளை ஆலோசிப்பதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.