பிகாரில் 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ளது.
இதனையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்றும், நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (செப்.29) பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை பார்வையிட தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவும் அவரது குழுவினரும் பாட்னா சென்றனர்.
மேலும் அவர்கள், மூன்று நாள்கள் பிகாரில் தங்கி, அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வும் ஆலோசனையும் மேற்கொள்ள உள்ளனர். அப்போது பிகார் மாநிலத் தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
தவிர, அக்டோபர் 1ஆம் தேதி டெல்லிக்குத் திரும்புவதற்கு முன், தலைமைத் தேர்தல் ஆணையர், பிகார் மாநில தலைமைச் செயலர், உள்துறை செயலர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இதையும் படிங்க...பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கு வலியுறுத்தல்...!