டெல்லி சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் சிங் அளித்த பேட்டியில், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் குறித்து கருத்து தெரிவித்தார். அந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்று கூறினார். மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். இதுகுறித்து பாஜகவினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரில், டெல்லியில் தேர்தலுக்கு முன்பாக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சஞ்சய் சிங்கின் கருத்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் சஞ்சய் சிங்குக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. அந்த நோட்டீஸில் இன்று மதியம் 12 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை 11ஆம் தேதி நடக்கிறது.
இதையும் படிங்க: பிரதமரின் 'ட்யூப் லைட்' விமர்சனத்துக்கு காங்கிரஸ் பதிலடி