அகமதாபாத்தில் ஏப்ரல் 17 ஆம் நடந்த தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவுஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். அப்போது அவர் மோடியை பெரிய பொய்யர் என விமர்சித்தார்.
இதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, வி.கே.சிங், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோர் புகார் அளித்தனர். இந்நிலையில் சித்து பேசியது தேர்தல் விதிகளை மீறியதாகக் கூறி நேரில் ஆஜராக கோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, சிறுபான்மையினர் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார் எனக் கூறியதற்கு தேர்தல் ஆணையம் அவர் விதிகளை மீறவில்லை எனக் கூறியது குறிப்பிடத்தக்கது