ETV Bharat / bharat

பாஜகவின் முக்கியப் புள்ளிகள் பரப்புரையில் ஈடுபட தடை - Parvesh Verma

டெல்லி: அனுராக் தாகூர், பர்வேஷ் வெர்மா ஆகிய இருவரையும் பாஜகவின் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் பட்டியலிலிருந்து நீக்குமாறும் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடைவிதித்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி செய்திகள்
அனுராக் தாக்கூர், பர்வேஷ் வெர்மா ஆகியோரை நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியலிலிருந்து நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு
author img

By

Published : Jan 29, 2020, 3:01 PM IST

டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஷாஹீன் பாக்கில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், ”துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதேபோல டெல்லி மேற்கு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வெர்மா காஷ்மீர் பண்டிட்களுக்கு நிகழ்ந்தது டெல்லியிலும் நிகழலாம் எனவும் ஷாஹீன் பாக்கில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெண்களை வீடுபுகுந்து கொல்லவும் பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கவும் வல்லவர்கள் எனவும் சர்ச்சைக்குரிய முறையில் பேசியிருந்தார்.

டெல்லி செய்திகள்தேர்தல் ஆணையத்தின் உத்தரவு

இதனிடையே தேர்தல் பரப்புரையின்போது இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவந்த இந்த இருவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இந்நிலையில், தற்போது அனுராக் தாகூர், பர்வேஷ் வெர்மா ஆகிய இருவரையும் பாஜகவின் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் பட்டியலிலிருந்து உடனடியாக நீக்குமாறும் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடைவிதித்தும் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: ‘துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்’ என முழங்கிய அனுராக் தாகூர் - தேர்தல் ஆணையம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.