பிகாரில் 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது, தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ளது.
இதையடுத்து, அக்டோபர் 28, மற்றும் நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பிகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்றும், நவம்பர் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.
7 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 396 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அம்மாநில அதன் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் ஒரு சுதந்திரமான, நியாயமான, பாதுகாப்பான தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது எனவும் கூறியுள்ளது. தேர்தலை இலகுவாக்க அதிகளவு இயந்திரங்களை பயன்படுத்தப்படவுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், பதிவுசெய்யப்படாத குடிமக்களின் அதிகபட்ச பதிவை உறுதி செய்வதற்காக, தேர்தல் வாக்காளர்களின் பட்டியல்களின் சிறப்பு சுருக்கத் திருத்தத்தையும் செய்துள்ளது.
தேர்தல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் மண்டபம் / அறையின் நுழைவு வாயிலில், அனைத்து நபர்களின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிய உதவும் கருவி பொருத்தப்படவேண்டும். கிருமி நாசினிகளை மக்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் வைக்கவேண்டும். தகுந்த இடைவெளிகள் முறையாகப் பராமரிக்கவும், நடைமுறைப்படுத்தவும் உதவும் வகையில் பெரிய அரங்குகளைப் பயன்படுத்தப்பட வேண்டும்.
வேட்புமனு சமர்ப்பிக்க ஒரு வேட்பாளருடன் ஐந்து நபர்கள் வந்த நிலையில் தற்போது இரண்டு நபர்கள் மட்டுமே வரவேண்டும். வேட்பாளர்கள் மூன்று கார்களுக்கு பதிலாக இரண்டு கார்களை பயன்படுத்த மட்டுமே அனுமதிக்கப்படும்.
நியமன படிவங்களை தாக்கல் செய்ய ஆன்லைன் வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக வேட்பாளர்கள், தங்களது பாதுகாப்புத் தொகையை ஆன்லைனில் டெபாசிட் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, வீடு வீடாக பரப்புரைக்கான வேட்பாளர் உள்ளிட்ட நபர்களின் எண்ணிக்கையை ஆணைக்குழு மட்டுப்படுத்தியுள்ளது.
மேலும் வாக்கு சேகரிக்க பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை 10-லிருந்து ஐந்தாக குறை்ககப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள் மற்றும் சாலை நிகழ்ச்சிகள்அறிவுறுத்தல்களுடன் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் அவை உள்துறை அமைச்சகம் அல்லது மாநிலத்தால் வழங்கப்பட்ட கட்டுப்பாட்டு அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
தகுந்த இடைவெளிகளை கடைப்பிடிப்பதை உறுதிசெய்தல், தேர்தல் செயல்பாட்டின்போது முகக்கவசங்கள், கிருமி நாசினிகள், உடல் வெப்ப பரிசோதனைக் கருவிகள், கையுறைகள், பிபிஇ கருவிகள்ஆகியவை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்குச்சாவடியும் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக சுத்திகரிப்பு, தகுந்த இடைவெளிக்கான குறிப்பான்கள், கரோனா வைரஸ் விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்: மூன்று கட்டங்களாக அக்.28 முதல் நவ.7 வரை நடக்கும்!