ETV Bharat / bharat

புதிய தேர்தல் வழிகாட்டிதல்களை பின்பற்றி நியாயமான தேர்தலை நடத்த முடியாது - காங்கிரஸ் - புதிய தேர்தல் வழிகாட்டிதல்கள்

டெல்லி: தேர்தல் ஆணையம் அறிவித்த புதிய தேர்தல் வழிகாட்டுதல்களை பின்பற்றி நியாயமான சுதந்திரமான தேர்தலை நடத்த முடியாது என காங்கிரஸ் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ்
author img

By

Published : Aug 22, 2020, 1:18 PM IST

பிகார் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு நேரத்தில் வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே செல்ல முடியும், பதிவேட்டில் கையொப்பமிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் நேரத்தில் வாக்காளர்களுக்கு கையுறைகள் வழங்கப்படும், ஒரு வாக்குச் சாவடியில் அதிகபட்சம் 1,000 வாக்காளர்கள் வாக்களிக்கலாம் உள்ளிட்ட புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதிய வழிய வழிகாட்டுதல்களை பின்பற்றி நியாயமான சுதந்திரமான தேர்தலை நடத்த முடியாது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், "காங்கிரஸ் கொடுத்த ஆலோசனைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கரோனா ஏற்படுத்தியுள்ள சவாலை சமாளிக்க இந்த வழிகாட்டுதல்கள் போதுமானதாக இல்லை. ஒரே வாக்கப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் கரோனா பரவும் ஆபத்து அதிகமுள்ளது. எனவே, அதனை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

வாக்கு சீட்டு முறை மூலம் இதனை தவிர்க்கலாம் என ஆலோசனை கூறினோம். இந்த பிரச்னையை தீர்க்கும் வகையில் நாங்கள் வழங்கிய தீர்வு முழுவதுமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், வாக்குப் பதிவு இயந்திரத்தில் கிருமிநாசினி தெளிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் கரோனாவின் தாக்கத்தில் வேறுபாடு உள்ளது. இருப்பினும், நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் தனித்துவமான வழிகாட்டுதல்தள் வெளியிடப்படவில்லை. முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசு நிர்வாகிகளுக்கு தேர்தல் வழங்கியுள்ளது. விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பஞ்சாபில் ஊடுருவிய பயங்கரவாதிகள்: இந்திய, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.