கொல்கத்தாவில், கிழக்கு ரயில்வே மணடலத்தின் கீழ் உள்ள மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி முதல் விடுப்பில் இருந்து வரும் பெண் மருத்துவருக்கு தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு ரயில்வே மண்டல செய்தித் தொடர்பாளர் நிகில் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
கிழக்கு ரயில்வே மணடலத்தின் முதன்மை மருத்துவமனையான பி.ஆர். சிங் மருத்துவமனையைச் சேர்ந்த மேலும் 10 மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட மருத்துவருடன் தொடர்பில் இருந்த காரணத்தால் தற்போது தனிமைப்படுத்திக் கொள்ள அறிவிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பி.ஆர். மருத்துவமனையில் இதுவரை எந்தவொரு கரோனா நோயாளிக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் குடும்ப உறுப்பினர்கள் நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த நாடு திரும்பும் வெளிநாட்டினர்!