திக்லிபூர் (அந்தமான் நிக்கோபார் தீவு): அந்தமானில் நேற்று (டிச. 06) இரவு திக்லிபூர் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளது.
திக்லிபூரிலிருந்து தென்கிழக்குப் பகுதியில் 55 கி.மீ. தொலைவில், சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேற்றிரவு சுமார் 7.05 மணியளவில் ஏற்பட்டது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இதனால் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
இதையும் படிங்க: ஆந்திராவில் பரவும் புதிய நோய் - 227 பேர் மருத்துவமனையில் அனுமதி!