பெங்களூரு: கர்நாடக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை தொடங்கி ஏழு அரசு உயர் அலுவலர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கூடுதல் கூட்டுறவு பதிவாளர், நகர திட்டமிடல் இணை இயக்குநர், மாவட்ட சுகாதார அலுவலர், மருந்தியல் துறைத் தலைவர், பொதுப்பணித்துறை இணை பொறியாளர், சுங்கத்துறை அலுவலர் உள்ளிட்ட ஏழு அலுவலர்களுக்கு சொந்தமான 30 இடங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனையில் தங்கம், ரொக்கப் பணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருள்கள் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சோதனை பெங்களூரு, பெல்லாரி, கோலார், தார்வாடு, தக்ஷின கன்னடா, சித்ர துர்கா, ராஜிவ் காந்தி நகர் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி இவர்கள் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.