துர்கா பூஜையானது நாடு முழுவதும் பல இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. கொல்கத்தாவில் யங் பாய்ஸ் கிளப்பின் 50ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கிளப்பை சேர்ந்தவர்கள் வித்தியாசமான முறையில் ’தீம்’ (theme) அமைத்து துர்கா பூஜையை கொண்டாடிவருகின்றனர்.
இதில் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம் மீது நடத்திய வான்வழித் தாக்குதல் போன்ற வடிவில் சிலைகள் அமைத்துள்ளனர். மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள், பயங்கரவாதிகள், விமானத்தின் மாதிரிகள் உள்ளிட்ட சிலைகளும் துர்கா பூஜையில் இடம்பெற்றுள்ளன.
இந்திய விமானப்படை வீரர் விங் கமாண்டர் அபிநந்தனை பெருமைப்படுத்தும் விதமாக அவரது உருவம் கொண்ட சிலையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையாளர் பலரும் பார்வையிட்டு புகைபடம் எடுத்துச் செல்கின்றனர்.
ராணுவத்தினரை பெருமைப்படுத்தும் விதமாக இதுபோன்ற சிலைகள் அமைத்து துர்கா பூஜையைக் கொண்டாடுவதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : ஆயுதபூஜை: வாழைத்தாரை நம்பி ஏமாற்றமடைந்த விவசாயிகள்...!