ETV Bharat / bharat

விநாயகர் தபால் தலையில் மறைத்துவைத்து போதைப்பொருள் கடத்தல்! - Ganapathi Photo Stamp

விநாயகர் தபால் தலையில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தி வந்த நபரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்தனர்.

விநாயகர் தபால் தலையில் மறைத்துவைத்து போதைப்பொருள் கடத்தல்

author img

By

Published : Nov 30, 2020, 1:51 PM IST

பெங்களூரு : கர்நாடகா மாநிலம் பெங்களூரில், எக்ஸ்ரே தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த அருண் ஆண்டனி என்பவர் விநாயகர் தபால் தலை (Photo Stamp) மூலம் போதைப்பொருட்களைக் கடத்தி வருவதாக, காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன்பெயரில், அவர் பணிபுரிந்து வரும் கடையில் திடீர் சோதனை நடத்தியபோது, 15 லட்சம் ரூபாய் மதிப்புடைய 400 தபால் தலைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருணை கைது செய்தனர். சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய அமல் பைஜூ எனும் மற்றொரு நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டையத்திலிருந்து, போதைப்பொருள் அடங்கிய விநாயகர் தபால் தலைகள் பெறப்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான அருணிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கிரிக்கெட் சூதாட்டத்திற்கு நகை தராததால் தாய், தங்கையை கொன்ற இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.