புதுச்சேரி அரசு சமூகநலத் துறை சார்பாக நேற்று முதல் போதை தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டுவருகின்றது. அதன்படி போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற மராத்தான் போட்டி புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூகநலத் துறை செயலர் ஆலிஸ் வாஸ் கலந்துகொண்டு மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.
மேலும், இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 10 கி.மீ தூரத்திற்கு நகரின் பல்வேறு சாலைகள் வழியாக ஓடி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: மகளிர் டி20 உலகக்கோப்பை: மழையால் ரத்து செய்யப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்!