பெங்களூரில் போதைப் பொருள் வழக்கு தொடர்பான விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பல கன்னட திரைப் பிரபலங்களும் சிசிபியிடன் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர். இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் சிக்கிய நடிகை ராகினி அளித்த பார்ட்டியிலிருந்த சாப்ட்வேர் இன்ஜினியரான ஆதித்யா அகர்வாலை, சிசிபி காவல் துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வந்தனர்.
அதில், ஆதித்யா வெளிநாட்டில் ஆண்டுக்கு 48 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்ததும், போதைப் பொருள் பழக்கத்தின் காரணமாக பெங்களூரு வந்ததும் தெரிய வந்தது. மேலும் இந்த விசாரணையில், போதைப் பொருள் விநியோகம் தொடர்பாக வியாபாரி வீரண் கண்ணாவுடன் இணைந்து செய்த தவறுக்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக பல முக்கியத் தகவல்களை ஆதித்யா தெரிவித்துள்ளார். அவர் அளித்த தகவல்களின்பேரில், சிசிபி பலருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.