இது தொடர்பாக இன்று ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் (எஸ்.பி) இணைந்து பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி) காட்பந்தன் கூட்டணியை உருவாக்கியது.
வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவதற்காகவும், ஜனநாயகத்தின் வெற்றிக்காகவும் நாங்கள் மிகவும் கடுமையாக உழைத்தோம்.
பொது நலனுக்காக எங்கள் கட்சி, எஸ்.பியுடன் கைகோர்த்திருந்ததாலும் அவர்கள் சுயநலமாகவே சிந்தித்தனர்.
சமாஜ்வாதி கட்சியின் 2012-2017 ஆட்சி காலத்தில், பல தலித் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி தேசத்தின் நலனுக்காக சமாஜ்வாதியுடன் கைகோர்க்க முடிவு செய்தது. இருப்பினும், தேசிய நலனுக்காக கூட்டணிக்கு பகுஜன் சமாஜ் ஒப்புக்கொண்டது.
எஸ்.பி.யின் தலைமையின் குடும்ப சண்டை காரணமாக அவர்கள் படுதோல்வி அடைந்தனர்.
தேர்தலுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் அவர்கள் எங்களுடன் உரையாடுவதை நிறுத்திவிட்டனர். எனவே, நாங்கள் அவர்களுடன் பிரிந்து செல்ல முடிவு செய்தோம்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சமாஜ்வாதி கட்சி நடந்துகொண்டதை பகுஜன் சமாஜ் கட்சி பார்த்தது.
1995 ஜூன் 2ஆம் தேதி பதியப்பட்ட அந்த வழக்கை திரும்பப் பெற்றதன் மூலம் நாங்கள் ஒரு பெரிய தவறு செய்ததை அப்போதுதான் உணர்ந்தோம். நாங்கள் அவர்களுடன் கைகோர்த்திருக்கக் கூடாது. நாங்கள் சற்று ஆழமாக யோசித்திருக்க வேண்டும். நாங்கள் அவசரமாக ஒரு தவறான முடிவை எடுத்தோம்.
சமாஜ்வாதி அரசு தலித் விரோதமானது என்பதை மீண்டும் நிரூபணதாக்கி உள்ளது.
தலித் மக்கள் கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெறவும், உயர் பதவிகளை அடைவதை தடுக்கவும் பல்வேறு சிக்கல்களை சமாஜ்வாதி கட்சி உருவாக்கியது.
அதே சமாஜ்வாதி கட்சிதான், இப்போது தலித் தலைவர் கௌதம் ராம்ஜி பெற வேண்டிய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நரித்தனமாக பறிக்க முயல்கிறது" என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று(அக்.28) சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து, அக்கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.