புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு அருகேயுள்ள திருக்கனூர், திருபுவனை உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
இதன் காரணமாக, மண்ணாடிப்பட்டு தொகுதி மக்கள் பலமுறை கோரிக்கைகள் அளித்தும், போராட்டங்களை நடத்தியும் வந்துள்ளனர்.
ஆனால் இவர்களது கோரிக்கைகளுக்கு அரசு இதுவரை எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க தவறிய கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரை கண்டித்து, மண்ணாடிப்பட்டு, திருபுவனை ஆகிய இரு தொகுதி என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.டி.ஆர். செல்வம், கோபிகா ஆகியோர் தொகுதி மக்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு காலியான தண்ணீர் குடத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது, ஆணையர் அலுவலகம் வராததை கண்டித்தும், தண்ணீர் குடங்கள், பானைகளையும் உடைத்தும், கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.