தெலங்கானாவில் உள்ள சம்சாபாத் விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இதில், இண்டிகோ விமானம் மூலம் துபாய்க்கு செல்லவிருந்த இருவரிடம் தலா 74,37,500 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அவர்கள் பிஸ்கட் பெட்டிக்குள் வைத்திருந்தது சோதனையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.