சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் ஒரு லாரியில் கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், இந்தூரில் வருவாய் நுண்ணறிவு இயக்குநரக அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் அரக்கு பள்ளத்தாக்கிலிருந்து வந்த லாரியை பனிமூட்டத்திற்குள் கடும் சிரமத்தோடு சோதனையிட்டதில் உரமூட்டைகளுக்குள் கஞ்சா பதுக்கிவைத்திருந்தது தெரிய வந்தது.
ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த கஞ்சா மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
கஞ்சா கடத்தி வந்த ஐவரையும் கைது செய்த டிஆர்ஐ பிரிவினர், அவர்களிடமிருந்த 3.07 கோடி ரூபாய் மதிப்பிலான 1534கிலோ கிராம் கஞ்சா (ஒன்றரை கிலோ டன்) பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக குட்கா பொருள்களைக் கடத்திய நபர் கைது: 200 கிலோ குட்கா பறிமுதல்!