மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியிலிருந்து டெல்லிக்கு தங்கம் கடத்துவதாக மேற்கு வங்க வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் பேரில் நேற்று முன்தினம் (ஆக. 14) இரவு வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். இதில் சிலிகுரியிலிருந்து டெல்லிக்கு கடத்தயிருந்த 26.25 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து, மூன்று பேரை கைது செய்தனர்.
அந்த தங்கத்தின் மதிப்பு 54 கோடியே ஐந்து லட்சம் ரூபாய் ஆகும். கைது செய்யப்பட்ட சவுரப் ஷாமரவ் ஷிர்கண்டே (23), சந்தேஷ் அப்பா நரலே (21), சஷிகாந்த் தனாஜிகுட்டே (25) என்ற மூன்று பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து வருவாய் புலனாய்வுத் துறையினர், காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...மதுபானக் கடையில் ரூ.5.39 லட்சம் திருடிய ஊழியர்கள் இருவர் கைது!