மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆடை கட்டுபாட்டை அரசு அறிவித்துள்ளது. அதில், தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் பொதுமக்கள் அதிகம் வரும் இடங்கள் என்பதால் அதனை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு கண்ணியமான ஆடைகளை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருகையில் ஜீன்ஸ், டிசர்ட் அணிவதை தவிர்த்துக்கொள்ள வேண்டு்ம். அரசு அலுவலர்கள் ஃபார்மல் ஆடைகளில் பணிக்கு வருவதே உகந்தது.
அனைத்து அரசு அலுவலர்கள், ஊழியர்களிடமிருந்து நல்ல நடத்தை, ஆளுமையை மக்கள் எதிரிப்பார்க்கின்றனர். உடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதுமட்டுமின்றி, அனைத்து அரசு ஊழியர்களும் ஹேண்ட்ஸ்பன் பயன்பாட்டை ஊக்குவிக்க குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமைகளில் காதி ஆடைகளை அணிய வேண்டும்.
பெண் ஊழியர்கள் புடவைகள், சல்வார்கள்/சுடிதார் குர்தாக்கள், கால்சட்டை பேன்ட் மற்றும் சட்டைகளை தேவைப்பட்டால் துப்பட்டாக்களுடன் அணியலாம். ஆனால், ஆண்கள் சட்டைகள், பேண்ட் அல்லது கால்சட்டை பேண்ட் மட்டுமே அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படங்கள் கொண்ட ஆடைகளை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.