ETV Bharat / bharat

இரு சக்கர வாகனத்தில் பயணித்த பெண்ணை நேருக்கு நேர் மோதி தூக்கிய கார்; பதை பதைக்கும் வீடியோ!

கர்நாடக: மங்களூருவில், பெண்ணின்‌‌ இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

 dragged for some distance: Terrible accident captured in CCTV

author img

By

Published : Aug 10, 2020, 9:19 AM IST

கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள கத்ரி கம்ப்லா அருகே இளம்பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் அந்தப் பெண்ணின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அப்பெண் காருக்கு அடியில் சிக்கிய நிலையில் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டார்.

இதில், படுகாயமடைந்த அவரை அவ்வழியாக வந்த எம்.எல்.ஏ யு.டி. காதர் மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, அப்பெண் காரில் சிக்கித் தவிக்கும் காட்சிகள், அனைவரையும் திடுக்கிடுக்க வைத்தது. இந்நிலையில், அந்தக் காணொலி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விபத்தில் சிக்கிய பெண் வனிஸ்ரீ பட் (22) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.