’புதிய இந்தியா’ என்ற தலைப்பில் குஜராத் மாநிலம் கோவாடியாவில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதில், மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "இடதுசாரி நண்பர்களுக்கு ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். முதலில் எங்களைத் தோல்வி அடையச்செய்து அரசை அமையுங்கள்.
மதச்சார்பின்மை, அனைவருக்குமான அரசியல், மனித உரிமைகள் ஆகியவற்றை நீங்கள் எங்களுக்குக் கற்றுத் தர வேண்டாம். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசியுள்ளீர்களா? இல்லை.
நாட்டில் பிறந்ததற்கான சான்றிதழை வழங்க சிலர் மறுக்கின்றனர். ராமர் அயோத்தியில் பிறந்தார் என மக்கள் பல ஆண்டுகளாக நம்பிவருகின்றனர். ஆனால், அதற்குச் சிலர் ஆவணங்களைக் கேட்கின்றனர். இதன்மூலம் அவர்களின் இரட்டை நிலைப்பாடு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
முன்னதாக, பேசிய வெளியுறத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜனநாயகத்தைப் பரப்புவதன் மூலம் வரலாற்றைக் கண்டறியலாம் எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: உண்மை தரவுகளை மறைக்கும் மத்திய அரசு - பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் விமர்சனம்!