ETV Bharat / bharat

சிஏஏவுக்கு எஸ்... என்.ஆர்.சிக்கு நோ... - மகாராஷ்டிரா முதலமைச்சர் தாக்கரே - மகாராஷ்டிரா முதலமைச்சர் தாக்கரே

மும்பை: மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டாலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட மாட்டாது என மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Uddhav
Uddhav
author img

By

Published : Feb 18, 2020, 9:11 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு மாநிலங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே, "குடியுரிமை திருத்தச் சட்டமும் தேசிய குடிமக்கள் பதிவேடும் வெவ்வேறு விவகாரங்கள். அதேபோன்று தேசிய மக்கள் தொகை பதிவேடு வேறு விவகாரம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டாலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட மாட்டாது" என தெரிவித்துள்ளார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அது தாக்கரேவின் தனிப்பட்ட கருத்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் வாக்களித்தது என பதிலளித்தார்.

உத்தவ் தாக்கரே

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்த மாட்டோம் என மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் கையை எடுப்பேன்' - சிவ சேனா மூத்தத் தலைவர் மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.