நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று மாநிலங்களவையில் உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். சீனா மீதான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பால் அதிருப்தியடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமைச்சரின் அறிக்கை குறித்து விவாதிக்க வாய்ப்பு கோரி தொடர் அமளியில் ஈடுப்பட்டனர்.
இதனால், பொறுமை இழந்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, உறுப்பினர்கள் கூச்சலிடுவதை நிறுத்தி, அவையில் அமைக்கப்பட்ட முறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், உறுப்பினர்கள் அவையின் அமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும், பிரச்னை என்ன என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு நடப்பதைப் பற்றி நான் வேதனைப்படுகிறேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்திய வரைபடம் குறித்து தவறான கருத்துகளை மாணவர்களுக்கு பாஜக அளிக்கிறது- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு