இந்திய, சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ராகுல் தொடர் கேள்விகளை எழுப்பி பிரதமர் மோடியை விமர்சித்துவருகிறார். இந்நிலையில், இந்திய எல்லை பகுதிக்குள் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதா? அச்சப்படாமல் உண்மையை சொல்ல வேண்டும் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சீன விவகாரத்தை பொறுத்தவரை அரசு மற்றும் ராணுவத்தின் பக்கமே ஒட்டு மொத்த நாடும் நிற்கிறது. ஆனால், முக்கியமான கேள்விக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை. நமது எல்லை பகுதிக்குள் யாரும் ஊடுருவவில்லை என பிரதமர் ஒரு சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
ஆனால், சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக லடாக் மக்கள், ஓய்வுபெற்ற ராணுவ தளபதிகள் தெரிவிக்கின்றனர். செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட புகைப்படங்கள் இதனை உறுதி செய்கின்றன. மூன்று இடங்களில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
प्रधानमंत्री जी,
— Rahul Gandhi (@RahulGandhi) June 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
देश आपसे सच सुनना चाहता है।#SpeakUpForOurJawans pic.twitter.com/tY9dvsqp4N
">प्रधानमंत्री जी,
— Rahul Gandhi (@RahulGandhi) June 26, 2020
देश आपसे सच सुनना चाहता है।#SpeakUpForOurJawans pic.twitter.com/tY9dvsqp4Nप्रधानमंत्री जी,
— Rahul Gandhi (@RahulGandhi) June 26, 2020
देश आपसे सच सुनना चाहता है।#SpeakUpForOurJawans pic.twitter.com/tY9dvsqp4N
பிரதமர் இதில் உண்மையை பேச வேண்டும். அச்சப்படாமல் நாட்டு மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள். ஊடுருவல் நடைபெறவில்லை என நீங்கள் கூறினால், அது சீனாவுக்குதான் பயன் தரும். ஒன்றிணைந்து போராடினால்தான் அவர்களை விரட்ட முடியும். ஆம், நமது எல்லைப் பகுதியை சீனா கைப்பற்றியுள்ளது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லுங்கள். ஒட்டு மொத்த நாடும் உங்களுடன் நிற்கிறது
இறுதியான கேள்வி, ஆயுதமின்றி வீரர்களை அனுப்பியதற்கு காரணம் என்ன?" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19 பரவலை முழுமையாக தடுத்த யோகிக்கு பிரதமர் மோடி பாராட்டு!