இது தொடர்பாக டெல்லியில் ஊடகங்களை சந்தித்த தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா கூறுகையில், “நாடு தழுவிய பூட்டுதல் அமலிலுள்ள நிலையில் பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் அதிகரித்துள்ளது. இது குறித்து பல்வேறு வழக்குகள் வந்துள்ளது.
கடந்த மாதம் (மார்ச்) 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் வரை தேசிய பெண்கள் ஆணையத்துக்கு 69 வீட்டு புகார்கள் வந்துள்ளது. எனது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கும் தினந்தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட புகார்கள் குவிகிறது.
எனது அலுவலக ஊழியர்களுக்கும் புகார் மின்னஞ்சல்கள் வருகிறது. நாடு முழுக்க 21 நாட்கள் பூட்டப்பட்டுள்ளதால் நான் பல்வேறு வகையான புகார்களைக் காண்கிறேன். பெண்கள் காவல்துறையை அணுக முடியவில்லை. அவர்கள் காவல்துறைக்குச் செல்லவும் விரும்பவில்லை.
ஏனெனில் கணவர் காவல் நிலையத்திலிருந்து திரும்பி வந்தவுடன், அவர் மீண்டும் அந்தப் பெண்ணை சித்திரவதை செய்வார். இது வேறு வகையான பிரச்னை. முன்னதாக பெண்கள் வெளியே சென்று பெற்றோரை சென்றடைவார்கள்.
ஆனால் இப்போது அந்த விருப்பமும் நடைபெறாத வகையில் கதவுகள் அடைப்பட்டுள்ளது. வீட்டு வன்முறை வழக்குகள் அதிகரிப்பதற்கு ஒரு பெரிய காரணம் என்னவென்றால் பெண்கள் வீட்டுக்குள்ளே அடைப்பட்டு கிடப்பதுதான்.
முன்பெல்லாம் பெண்கள் தங்களின் பெற்றோர், சகோதரர்கள் வீட்டுக்கு செல்லலாம். தற்போது அது முடியாத காரியம். இதுதொடர்பாக பெண் ஒருவரிடமிருந்து புகார் ஒன்றை பெற்றேன். அவர் கணவர் தன்னை அடித்து துஷ்பிரயோகம் செய்கிறார் என்று கூறினார்.
நேற்று எனக்கு மொஹாலியிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் தனது கணவர் தன்னை கோவிட்19 என்று அழைத்து சித்ரவதை செய்வதாக கூறினார். இதுபோன்ற சிக்கல்களிலிருந்து பெண்கள் வெளிவர கடுமையாக உழைக்க வேண்டும்.
பெண்களுக்கு தைரியம் மற்றும் ஆதரவு கொடுக்க நாங்கள் 24 மணி நேரமும் போராடி வருகிறோம். பெண்கள் தாங்கள் அனுபவிக்கும் துன்பங்களை ஊடகங்களில் தைரியமாக தெரிவிக்க வேண்டும்” என்றார்.