விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை மே 25ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவித்தார். அதையடுத்து பிற மாநில விமானப் பயணிகளை தங்களது மாநிலத்துக்குள் அனுமதிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், "தமிழ்நாட்டிற்கு பிற மாநிலங்களிலிருந்து அதிகபட்சம் 25 விமானங்களின் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புறப்படும் விமானங்கள் குறித்து மாநில அரசு பரிசீலனை செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக குஜராத், மாகாராஷ்டிரம் உள்ளிட்ட கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு குறைவான விமானங்களை இயக்க வேண்டும்" எனத் அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாட்டிலிருந்து மும்பை, கொல்கத்தா தவிர மற்ற நகரங்களான டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, மதுரை, கோவைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் விமானப் பயணிகளுக்கு கட்டுபாடுகள், விதிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் அனைத்துப் பயணிகளும் மாநிலத்தின் குறிப்பிட்ட இணையத்தில் பயணத்திற்கான பதிவு செய்து, பயணத்திற்கு முன்பே அந்தந்த மாநிலங்களுக்கான இ-பாஸ் பெற வேண்டும். அதன்படி விமான நிலையத்திற்கு வந்தவுடன் பயணிகள் கியூஆர் குறியீட்டை காட்டி பயண அனுமதி பெறலாம்.
அங்கு பயணிகள் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். எந்த அறிகுறிகளும் இல்லாமல் காணப்படும் பயணிகள் கூட ஏற்கனவே 14 நாள்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் உள்நாட்டு விமானங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் மாநில அரசின் இ-பாஸ் மூலம் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யவில்லை என்றால், அவர்கள் விமான நிலையத்திற்குள்ளேயே தடுத்த நிறுத்தப்படுவார்கள். இ-பாஸ் பெற்றப் பின்னரே தமிழ்நாட்டிற்குள் அனுமத்திக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை, கொல்கத்தா தவிர மற்ற நகரங்களான டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, மதுரை, கோவைக்கு இயக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: இ பாஸ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்குள் அனுமதி...! விமான பயணத்துக்கான நெறிமுறைகளை வெளியிட்டது அரசு