இந்தியாவில் அதிகமான கைதிகள் இருக்கும் சிறையான டெல்லி திகார் சிறையில் கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி சிறை நிர்வாக அலுவலர் பேசுகையில், ''திகார் சிறைக்கு அழைக்கப்பட்டுவரும் ஒவ்வொரு புதிய கைதிக்கும் முதலில் முழுமையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறன்றன. அதன்பின் மட்டுமே சிறைக்குள் கைதிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா வைரஸை எதிர்கொள்ளும் விதமாக கடந்த மாதமே நானூற்றுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பிணை வழங்கினோம். இதற்காக டெல்லி அரசு சார்பாக சிறை விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
10 ஆயிரம் சிறை கைதிகள் வசிக்கும் வகையில் அமைந்துள்ள திகார் சிறையில், இப்போது இரட்டிப்பு எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சிறை அலுவலர்கள் வெளியாட்களுடனும், சிறைக் கைதிகளுடனும் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளில் யாருக்கும் கரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இங்கே மட்டுமல்லாமல் ஒவ்வொரு சிறையிலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறையிலிருந்து வெளிவரும் நிர்வாகிகளும், சிறைக்கு மீண்டும் வருவதற்கு முன்னதாக முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டுதான் அனுமதிக்கப்படுகிறார்'' என்றார்.
இதையும் படிங்க: கோவிட்-19: திகார் சிறையிலிருந்து 400 கைதிகள் விடுவிப்பு