கேரள மாநிலம் மலப்புரத்தில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிபொருள் நிரம்பிய அன்னாசிப் பழத்தை உண்டதால் உயிரிழந்த சம்பவம், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இச்சம்பவம் நடந்து அதன் சுவடு மறைவதற்குள்ளாக, இமாச்சலப் பிரதேசம் ஜன்துதா பகுதியில் கர்ப்பிணி பசுவிற்கு வெடிபொருள் நிரம்பிய உணவு அளிக்கப்பட்டதாக ஒரு காணொலி பலராலும் பகிரப்பட்டுவருகிறது.
இதற்கிடையே மகாராஷ்டிர மாநிலம் அவுராங்கபாத்தில் நாயின் கழுத்தில் சங்கிலியை இறுக்கமாகக் கட்டி, இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் 1 கிமீ தூரத்திற்கு இழுத்துச் செல்லும் காணொலி தற்போது அனைவரையும் கோபமடையச் செய்துள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாகவே விலங்குகளுக்கு எதிரான இதுபோன்ற கோரச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. விலங்குகளை விட மோசமாக நடந்துகொள்ளும் மனிதர்களால், மண்ணில் மனிதம் அழிந்துவருவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க; முன்பு கர்ப்பிணி யானை… தற்போது கர்ப்பிணி பசு..!