கரோனாவைத் தடுக்க நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் அறிவிப்பால் குடிபெயர்ந்த தொழிலாளர் விவகாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லாக்டவுன் காரணமாக பெரு நகரங்களில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமத்திற்கு திரும்பும் அவலநிலை தொடர்ந்து வருகிறது. இந்தியாவை அதிகம் குடிபெயர் தொழிலாளர்களைக் கொண்டுள்ள நாடாக உத்தரப் பிரதேசம் உள்ளது.
இந்த குடிபெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பெரும் பாதிப்பிற்குள்ளான அம்மாநிலத்தின் அரசு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குடிபெயர் குழு ஒன்றை அமைத்து சொந்த மாநிலத்திற்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு திறன்சார் வேலை அளிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் மாநில தொழிலாளர்களை அரசின் அனுமதி இல்லாமல் மற்ற மாநிலத்தினர் வேலைக்கு அமர்த்த முடியாது எனத் தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். குடிபெயர் தொழிலாளர்களுக்கு நம்மை செய்யாமல் அவர்களின் உரிமையைப் பறிக்கும் விதமாக உத்தரப் பிரதேச அரசு செயல்படுகிறது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவின் பொக்கிஷம்... சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு!