மேற்குவங்கத்தில் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் அதனை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ் மருத்துவமனையிலும், லக்னோவில் உள்ள கிங் ஜான் மருத்துவ பல்கலைகழகத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவர்களின் பிரிதிநிதிகளை இன்று சந்தித்தார்.