இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், அம்மருத்துவ ஊழியர்கள் வெளியிட்ட காணொலியில், "CATS ஆம்புலென்சின் மூலம் சில நோயாளிகள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். இங்கு மருத்துவர்கள் பணியில் பிஸியாக இருப்பதால், கொஞ்ச நேரம் காத்திருக்குமாறு அவர்களை அறிவுறுத்தினோம்.
ஆனால், காதுகொடுத்துக்கூட கேட்காத, அந்த நோயாளிகள் தாங்கள் அணிந்திருந்த முகக் கவசங்களைக் கழற்றி, எறிந்து மருத்துவர்களிடம் மிக நெருக்கமாக வந்தனர்.
இதையடுத்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறுக் கூறி, விலக முயன்ற மருத்துவர்களைத் தடுத்து நிறுத்திய அந்நோயாளிகள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால், மருத்துவர்களுக்கும் நோயைப் பரப்பிவிடுவதாகவும் மிரட்டினர்.
பிறகு, அந்த நபர்களிடமிருந்து மருத்துவர் நகர முயன்றபோது, அவரிடம் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அந்நோயாளிகளைக் கட்டுப்படுத்துமாறு, மருத்துவர் மருத்துவமனை காவலர்களை அழைத்தபோதும் காவலர்களுடன் , அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.
மீண்டும் மீண்டும் கரோனா நோயைப் பரப்பிவிடப் போவதாக நோயாளிகள் மருத்துவர்களை மிரட்டினர்'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, மருத்துவர்களைப் பாதுகாக்க நேற்று கரோனா அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்ட சூழலில், இந்தச் சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இனி மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை, 5 லட்சம் வரை அபராதம்: மத்திய அரசின் அவசர சட்டம்!