ஹரியானா மாநிலம் குருகிராம் (Gurugram) பகுதியில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருபவர் ஹோமியோபதி மருத்துவர் வேத் பிரகாஷ் டாண்டன். இவர் தனது வீட்டிலேயே கிளினிக் நடத்தி வருகிறார். இதற்கிடையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரிடம் மருத்துவம் பார்ப்பதற்காக ஒருவர் வந்துள்ளார்.
அவரைப் பரிசோதனை செய்து மருந்துகள் கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால், அவர் அங்கிருந்து செல்லவில்லை. இந்நிலையில் தனது செல்போன் மூலம் மேலும் இருவரை தொடர்புகொண்டார்.
இதையடுத்து அங்கு வந்த இருவருடன் இணைந்து மருத்துவரின் மனைவி நெற்றியில் துப்பாக்கியை வைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.