மேற்கு வங்கம் மாநிலம் சவுத் தினாஜ்பூர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு, ரேஷன் கடைகளில் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர் ஊழியர்கள். ஊரடங்கால் அத்தியாவசிய தேவைகளை மட்டுமே நம்பியிருக்கும் மக்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்காததால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
ரேஷன் கடை ஊழியர்களின் செயலால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீமன் பானர்ஜி வீட்டை முற்றுகையிட்டனர்.
தகுந்த இடைவெளி இல்லாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டின் முன்பு ரேஷன் பொருள்கள் வேண்டும் எனப் பொதுமக்கள் கோஷம் எழுப்பினர். இதில், ஆத்திரமடைந்த ஸ்ரீமன் பானர்ஜி மக்களிடம், 'உங்களுக்கு என் கிட்னி வேண்டுமா?' எனக் கோபமாகக் கேட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.
பின்னர், மற்றொரு அலுவலரை அனுப்பிய வட்டார வளர்ச்சி அலுவலர், அப்பகுதி மக்களின் விவரங்களைச் சேகரித்துக்கொண்டார். 7 நாள்களின் ரேஷன் பொருள்கள் மக்களின் வீட்டிற்கே வரும் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: சாலைவாழ் மக்களுக்கு தினமும் மதிய உணவு - இளைஞர்கள் அசத்தல்!