மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 - 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இருந்தன. இருப்பினும் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன.
இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து, திமுக நாடாளுமன்றத் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறுகையில், "2019-20 அரையாண்டில் வளர்ச்சி விகிதம் 4.8 ஆக இருந்தது. இரண்டாவது அரையாண்டில் அது 5 விழுக்காடாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
பயிற்கடனுக்கும் நீர்பாசனத்திற்கும் எவ்வித வசதிகளும் செய்யப்படாமல் எப்படி நாட்டின் வளர்ச்சி இருக்கும் என்று தெரியவில்லை . அடிப்படை கட்டுமானங்களுக்கு மிகக் குறைவான நிதியையே ஒதுக்கியுள்ளனர்.
அடுத்தாண்டு 10 விழுக்காடு வளர்ச்சியை எதிர்பார்கிறோம் என்று மத்திய நிதியமைச்சர் சொல்லியிருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கை ஒரு வெற்றுவேட்டாக இருக்கிறது. அடுத்த நிதியாண்டில் 10 விழுக்காடு வளர்ச்சி என்பதெல்லாம் சாத்தியமில்லை. விவாசாயத்திற்கும் விவாசாயிகளுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு அறிவிக்கவில்லை" என்று விமர்சித்துள்ளார்.