புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் மூத்தத் தலைவருமான ஆர்.வி.ஜானகிராமன் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கனிமொழியுடன் அவரின் கணவர் அரவிந்தன், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்கள் சிவா, சிவக்குமார், ஜானகிராமன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மூத்த பிரமுகர் ராஜ்பவன் பாலாவை புதுவை நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கனிமொழி பேசினார்.
பின்னர் அவர் புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு வளாகத்தில் உள்ள பிரபல எழுத்தாளர் கி. ராஜநாராயணனை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து கனிமொழி நலம் விசாரித்தார். மேலும் எழுத்தாளர் கீராவின் குடும்பத்தினரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, கனிமொழி சென்னை திரும்பினார்.