இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "கோவிட்-19 பரவலால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
எனவே, ஆபத்தை தவிர்க்க உள்துறை விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தை காணொலி வாயிலாக நடத்த வேண்டும்.
உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர் அனந்த்ஷர்மாவுக்கும், உள்துறை செயலருக்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் இதனை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.