ETV Bharat / bharat

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கை விரைந்து முடிக்கக்கோரி அப்பாவு மனு! - Vote Recounting

டெல்லி: ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட அப்பாவு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கை விரைந்து முடிக்கக் கோரி அப்பாவு மனு!

author img

By

Published : Oct 6, 2020, 10:04 PM IST

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகளும், திமுக வேட்பாளர் அப்பாவு 69 ஆயிரத்து 541 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதனையடுத்து, 49 வாக்குகள் அதிகம் பெற்றிருந்த இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு தொடர்ந்த வழக்கில், தேர்தல் அலுவலர்களால் நிராகரிக்கப்பட்ட 203 அஞ்சல் வாக்குகளை மீண்டும் எண்ண தேர்தல் ஆணையத்திற்கு கடந்த ஆண்டு அக். 03 ஆம் தேதி உத்தரவிட்டது.

ராதாபுரம் தொகுதி தேர்தலில் எண்ணப்பட்ட 19, 20, 21 ஆகிய சுற்று வாக்குகளையும், ஆயிரத்து 508 அஞ்சல் வாக்குகளையும் மறுவாக்கு எண்ணிக்கை நடந்த உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த ஓராண்டாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் அப்பாவு அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில், "2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.