உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வன்புணர்வு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி சர்ச்சைக்குரிய வகையில் சாலை விபத்தில் சிக்கினார். இதிலும் குல்தீப் சிங்குக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உத்தரப் பிரதேச காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, குல்தீப் சிங் தற்காப்பு ஆயுதங்களை வைத்துக் கொள்ள தடைவிதித்தது. மேலும், அவரின் தற்காப்பு ஆயுத உரிமத்தை ரத்து செய்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.