ETV Bharat / bharat

பிரதமரின் ஒளி நடவடிக்கை மக்களின் வலி போக்குமா? ப.சிதம்பரம் - பிரதமரின் ஒளி நடவடிக்கை மக்களின் வலி போக்குமா

டெல்லி: மக்கள் அனைவரையும் ஒளியேற்றி வைக்க சொல்லும் பிரதமர், ஏழைகளின் வாழ்வாதார பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

P Chidambaram on PM Modi's address  PM Modi address to the nation  P Chidambaram on relief package for poor  business news  பிரதமரின் ஒளி நடவடிக்கை மக்களின் வலி போக்குமா  ப.சிதம்பரம், பிரதமர் காணொலி செய்தி, டெல்லி, கரோனா பாதிப்பு

author img

By

Published : Apr 3, 2020, 5:45 PM IST

நாடு முழுவதும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. கரோனாவின் தாக்கம் இந்தியாவில் பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • What we expected from you today was FAP II, a generous livelihood support package for the poor, including for those categories of poor who were totally ignored by @nsitharaman on 25-3-2020.

    — P. Chidambaram (@PChidambaram_IN) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், இன்று காலை காணொலி மூலமாக நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) இரவு 9 மணிக்கு பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் அகல் விளக்கேற்றி, கரோனாவால் இருளில் முழ்கியுள்ள இந்தியாவை வெளிச்சத்திற்குக் கொண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

  • The people are disappointed on both counts.

    Symbolism is important, but serious thought to ideas and measures is equally important.@PMOIndia @nsitharamanoffc

பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. அகல் விளக்கு ஏற்றும்படி கூறிய பிரதமரின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “ஊரடங்கு உத்தரவால் தினக்கூலி வேலை செய்பவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பொருளாதார ரீதியிலான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு, விளக்கேற்றி வைத்து கரோனா வைரசை ஒன்றிணைந்து எதிர்கொள்ளுவோம் என்று கூறியபோது, அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

நாட்டிலுள்ள 130 கோடி மக்களைப்பற்றியும் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கூறும் பிரதமர், கரோனாவில் இருந்து நாட்டின் பொருளாதார ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் எதிர்கொள்ள வல்லுநர்கள், தொற்று நோயியல் நிபுணர்களின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும்.

ஊரடங்கு உத்தரவால் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற வாழ்வாதார தொகுப்பு பற்றி அறிவிப்பீர்கள் என்று மக்களில் ஒருவராக நானும் எதிர்ப்பார்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது” என அந்த ட்விட்டரில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'பாஜகவினர் பாசிஸ்டுகள், ஜனநாயக விரோதிகள்'- அசோக் கெலாட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.