ETV Bharat / bharat

கரோனா காலங்களில் கையை உயர்த்தும் டிஜிட்டல் நிறுவனங்கள்! - hackers in corono

கரோனா காலங்களில் டிஜிட்டல் துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

hackers
hackers
author img

By

Published : May 22, 2020, 7:23 PM IST

Updated : May 26, 2020, 12:27 PM IST

ஹைதராபாத்: கரோனா காலங்களில் டிஜிட்டல் துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சூழலில் பல நிறுவனங்கள் சரிவை சந்தித்து வரும் நிலையில், அமெரிகாவின் டிஎக்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் 10.9 விழுக்காடு வளர்ச்சியை சந்தித்து அனைத்து பெருநிறுவனங்களையும் அதிரவைத்துள்ளது.

மக்கள் டிஜிட்டல் சார்ந்து இயங்க முனைந்துள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகிறது என உலக பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதுமட்டுமில்லாமல், உலக நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு எதிரான ஹேக்கிங் குற்றங்கள் ஏப்ரல் மாதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஏனெனில் கோவிட்-19 தொற்று நோய்களால் பல நிறுவனங்களின் பலவீனப்படுத்தப்பட்ட பாதுகாப்பை ஹேக்கர்கள் பயன்படுத்தி கொண்டனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால் பெரு நிறுவன வலையமைப்புகள் பலவீனமாகி ஹேக்கர்களின் வேலையை எளிதாக்குகிறது. பெரு நிறுவன பாதுகாப்புக் குழுக்கள் தரவைப் பாதுகாப்பதில் கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளன. பரவலாக மாறுபட்ட அமைப்புகளைக் கொண்ட வீட்டு கணினிகளிலும், தொலைதூரத்தில் இணைக்கும் நிறுவன இயந்திரங்கள் காரணமாகவும் ஹேக்கிங் எளிதாக செய்யப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

டிஜிட்டல் போக்குவரத்திற்கு பாதுகாப்பான சுரங்கப் பாதைகளை அமைக்கும் மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகளை (வி.பி.என்) பயன்படுத்தும் தொலைதூர ஊழியர்களாலும் ஹேக்கர்கள் பிரச்னையை அதிகரிக்கிறார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Last Updated : May 26, 2020, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.