"டிஜிட்டல் இந்தியா" விருது வழங்கும் விழா, இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த விழாவை தலைமை ஏற்று நடத்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் டிஜிட்டல் திறன் குறித்து பேசினார்.
அப்போது அவர், "கோவிட்-19 இந்திய பொருளாதாரத்தை முடக்கியிருந்தாலும், இந்தியா தற்சார்பு சக்தி மூலம் எழுந்து நின்று வீறுநடை போடவுள்ளது. அதற்கு தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும். இந்தாண்டு முடிவடையவுள்ள நிலையில் பெருந்தொற்றும் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவோமாக.
இந்த பெருந்தொற்று சமூக உறவுகள், பொருளாதார நடவடிக்கைகள், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல தளங்களில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
ஆரோக்கிய சேது தொடங்கி பல்வேறு டிஜிட்டல் முன்னெடுப்புகள், இந்த பெருந்தொற்றின் தாக்கத்தை கட்டுக்குள் வைக்க முக்கிய பங்காற்றின. நீதித்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை என அனைத்தும் டிஜிட்டல் தளத்திற்கு வேகமாக மாறிவருகிறது. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும்" என்றார்.
இதையும் படிங்க: கர்நாடக மேலவை உறுப்பினர் தற்கொலை : விசாரணைக் குழு அமைத்த சபாநாயகர் ஓம் பிர்லா