ETV Bharat / bharat

BRICS SUMMIT 11 டிஜிட்டல் பொருளாதாரம், பயங்கரவாத ஒழிப்பை வலுப்படுத்த உதவும் - மோடி

author img

By

Published : Nov 13, 2019, 12:16 PM IST

பிரேசில் பிரிக்ஸ் மாநாடு டிஜிட்டல் பொருளாதாரம், பயங்கரவாத ஒழிப்பு கூட்டுறவு ஆகியவற்றை வலுப்படுத்த உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

modi at brics

மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஐந்து நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் பொருளாதாரம் எனப்படும் மின்னிலக்க பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், பயங்கரவாத ஒழிப்பில் கூட்டுறவு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரிக்ஸ் உச்சி மாநாடு உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் புறப்படும் முன் கூறியுள்ளார்.

பிரேசில் நாட்டில் உள்ள பிரேசிலியா நகரில் இன்றும் நாளையும் (நவம்பர் 13, 14) 11ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்கின்றன.

சர்வதேச பயங்கரவாதம் குறித்து விரைவில் மாநாடு - பிரிக்ஸ்

2014ஆம் ஆண்டிலிருந்து ஆறாவது முறையாகப் பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுவருகிறார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜெயர் போல்சனாரோ ஆகியோரைச் சந்தித்து பிரதமர் மோடி பேசவுள்ளார்.

குறிப்பாக பிரேசில் அதிபர் போல்சோனாரோவுடன் நடக்கும் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியிலான நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பாகப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - பிலிப்பைன்ஸ் வர்த்தக உறவு செழிக்குமா?

இந்த மாநாட்டின் முடிவில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே முதலீடு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.