புதுச்சேரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, "புதுச்சேரியில் 31 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 6,535 பேருக்கு உமிழ் நீர் சோதனை நடத்தியதில் 6,444 பேருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக புதுச்சேரி எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, புதுச்சேரிக்கு 4,090 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளனர்.
அவர்களை மாநில சுகாதாரத்துறை பணியாளர்கள் தீவிரமாக மருத்துவ ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களில், சிலருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் உள்ள கிராமப் பகுதிகளில் கரோனா தொற்றை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தனியார் மயமாக்கம் ஜனநாயகத்துக்கு அழகல்ல - புதுச்சேரி முதலமைச்சர்!