இந்தியாவில் குறைந்தபட்ச வாக்கு பதிவாகும் மாவட்டங்களில் பெங்களூரும் ஒன்றாக இருந்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு நடந்தத் தேர்தலில் வடக்கு பெங்களூருவில் 56.53, மத்திய பெங்களூருவில் 55.64, தெற்கு பெங்களூருவில் 55.75 விழுக்காடு வாக்கும் பதிவானது.
இந்த முறை வாக்குப்பதிவை அதிகரிக்க பல தரப்பிலுருந்து பலதரப்பட்ட முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. ருப்பத்தாந்கா பகுதியில் உள்ள தனியார் உணவகமான நிசார்கா கிராண்ட் சார்பாக வாக்களித்தவர் அனைவருக்கும் இலவச உணவு அளித்தச் சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா நட்சத்திரங்கள் ரமேஷ் பட், மதாய், மகேஷ் ஜோஷி, ரூபிகா ஆகியோர் வாக்கு செலுத்தி விட்டு இங்கு காலை உணவை அருந்தினர்.