டீசலுக்கான தேவை குறைந்திருந்தபோதிலும், கடந்த இரண்டு வாரங்களாக டீசல் விலையில் எதிர்பாராத உயர்வு காணப்படுகிறது. டெல்லியில் போக்குவரத்து எரிபொருள் நியூமரோ யூனோ நிலையை எடுக்கச் செய்துள்ளது. அதே நேரத்தில் மற்ற பெருநகரங்களில் பெட்ரோல், டீசல் விலை இடையேயான இடைவெளியைக் கணிசமாகக் குறைக்கிறது.
டெல்லியில் சனிக்கிழமை டீசல் விலை 17 காசு உயர்ந்து லிட்டருக்கு ரூ .81.52ஆக விற்பனை நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும், பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு லிட்டருக்கு ரூ .80.43 ஆக விற்பனை செய்யப்பட்டது.
டெல்லி தவிர்த்து மற்ற மெட்ரோ நகரங்களிலும் டீசல் விலை ஓரளவு அதிகரித்துள்ளது. ஆனால் அங்கு போக்குவரத்து எரிபொருளின் விலை பெட்ரோலைவிட லிட்டருக்கு ரூ .6-8 வரை குறைவாக உள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின்போது 82 நாள்கள் பெட்ரோல், டீசல் விலையில் விலை மாற்றமின்றி இருந்தது. எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் ஏழாம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி விலையை அதிகரித்துவருகிறது. அதன் பின்னர் முறையே பெட்ரோல் லிட்டருக்கு ரூ .9.5 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ .15.5 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.