ETV Bharat / bharat

பீஃப் பிரியாணி சாப்பிட்டு தூங்கிவிட்டீர்களா மோடி? - அசாதுதீன் ஓவைசி காட்டம்

author img

By

Published : Mar 24, 2019, 10:01 PM IST

ஹைதராபாத்: புல்வாமா தாக்குதல் நடைபெற்றபோது பீஃப் பிரியாணி சாப்பிட்டு தூங்கிவிட்டீர்களா என பிரதமர் நரேந்திர மோடியை அசாதுதீன் ஓவைசி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அசாதுதீன் ஓவைசி

ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஏஜஎம்ஐஎம் (AIMIM) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, காங்கிரஸ் மற்றும் பாஜக மீது அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியபோது 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானதாக பாஜக தலைவர் அமித்ஷா கூறுகிறார். அந்த தாக்குதலின்போது அங்கு 300-க்கும் மேற்பட்ட செல்போன்கள் செயல்பாட்டில் இருந்ததாக ராஜ்நாத் சிங் கூறுகிறார்.

பாலக்கோட்டில் உள்ள செல்போன்கள் தெரிகிறது என்றால் உங்கள் மூக்கின் கீழ் 50 கிலோ வெடிகுண்டு கொண்டுவரப்பட்டபோது என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். புல்வாமா தாக்குதல் சம்பவம் நடைபெற்ற போது பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பீஃப் பிரியாணி சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டீர்களா? என வினவினார். காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறிய அவர், நாட்டின் மதச்சார்பின்மையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்பவர்களுக்கு எதிராகதான் போராடி வருவதாக தெரிவித்தார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.